January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கப்பலில் காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க முதலமைச்சர் கோரிக்கை 

கப்பலில் காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க முதலமைச்சர் கோரிக்கை 

இலங்கைக் கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவக் கப்பலை விரட்டி பிடிக்க முயற்சித்த போது மூழ்கிப்போன கப்பலில் காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கடந்த 18.10.2021 அன்று மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படைனர் துரத்தியபோது மூழ்கியதாகவும், அதிலிருந்து மூன்று மீனவர்களில் இரண்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒரு மீனவரை தேடும் பணி .10.2021 முதல் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மீட்கப்பட்ட இரண்டு மீனவர்களுக்கு மறுவாழ்வு அளித்திடவும், காணாமல் போன மீனவரை கண்டுபிடித்திடவும் உரிய உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் தனது கடிதத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நீண்டகாலமாக தொடர்ந்து நிகழ்ந்து வருவதால் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை. எடுக்குமாறும் வெளியியுறவுத் துறை அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!
Open chat