January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இப்பவே இந்த ஆட்டம் போடுறீங்க

தென்காசி மாவட்டத்தில் இன்று பஞ்சாயத்து தலைவர்கள் பதவியேற்றபோது சில கூத்துக்கள் நடந்தன.

கூத்து: 1
பெரிய பிள்ளை வலசை இந்த கிராம பஞ்சாயத்து தலைவர் வேலுச்சாமி இசைக் கச்சேரி நடத்தி பதவியேற்பு விழாவை அமர்க்களப்படுத்தி இருந்தார். பதவியேற்ற கையோடு ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டார்.

கூத்து 2 : தென்காசி மாவட்டம் அடைக்கலப்பட்டணம் அருகே உள்ள பூலாங்குளம் கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்ட திரவிய கனிக்கு கிராம மக்கள் கரன்சி பரிசு அளித்தனர். புடவையில் குத்தப்பட்ட பணத்தோட அவர் பதவி ஏற்றிருக்கிறார்.

error: Content is protected !!
Open chat