December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

விடாது தொடரும் ஐந்தாவது ஆண்டு கல்வி உதவி

விடாது தொடரும் ஐந்தாவது ஆண்டு கல்வி உதவி

கொரோனா காலத்திலும் மாணவிக்கு வீடு தேடி வந்த உதவி கல்வி உதவி தொகை வழங்குதல்

ஊரடங்கு நேரத்தில் மாணவிக்கு உதவிய மனித நேயம்
தொடர்ந்து ஐந்தாம் ஆண்டு உதவியாக ரூபாய் 20,000 வழங்குதல்
கல்வி உதவி தொகையாக இதுவரை மொத்தம் 50,000 ரூபாய் வழங்கி அசத்தல் தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக வீடு தேடி சென்று கல்விக்கு கை கொடுக்கும் நாளிதழ் வாசகி

தேவகோட்டை – கடந்த, 2016 டிசம்பர் 9,
நாளிதழில் , சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி, தனலட்சுமியின் சாதனையைப் பாராட்டி, நாளிதழ் சார்பாக 1,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டு, அவரைப் பற்றிய செய்தி வெளியானது.
இச்செய்தியை படித்த, மதுரை வாசகி ஜானகி, அந்தப் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசியதோடு, தன் மகன், கார்த்திகேயனுடன் அங்கு சென்று, தனலட்சுமியை சந்தித்து, அவரின் சாதனை மெடல்களை பார்வையிட்டார். மாணவி, தனலட்சுமியின் பெற்றோர் கூலித்தொழிலாளிகள் என்பதை அறிந்த ஜானகி, மாணவியின் விருப்பமான, ஐ.பி.எஸ்., படிப்பது வரையிலான கல்வித்தொகை முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார். உறுதி அளித்ததோடு நின்று விடாமல் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு முன்பாக மதுரை பரவையில் இருந்து தேவகோட்டைக்கு மாணவியின் வீடு தேடி வந்து 9ம் வகுப்புக்கு ரூபாய் நான்கு ஆயிரமும்,கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு பள்ளி துவங்கும் முன்பே வீடு தேடி வந்து ரூபாய் நான்கு ஆயிரமும்,தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக கடந்த ஆண்டும் பள்ளி துவங்கும் முன்பே வீடு தேடி வந்து 11ம் வகுப்புக்கு ரூபாய் 10,500ம் கொடுத்து உள்ளார்கள் . கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் , ஊரடங்கு நேரத்திலும் வயதான அம்மையார் ஜானகி மனித நேயத்தோடு மாணவியை தொடர்பு கொண்டு 12ம் வகுப்புக்கு மாணவியின் தயார் வங்கி கணக்குக்கு ரூபாய் 11,000 அனுப்பி உதவி செய்துள்ளார்கள். இந்த ஆண்டு மாணவி அரசு பொறியியல் கல்லூரியில் இடம் பிடித்து , முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள நிலையில் , மாணவியின் வீடு தேடி வந்து ரூபாய் 20,000 வழங்கினார்.இது குறித்து ஜானகி கூறியதாவது: பல ஆண்டுகளாக, நாளிதழ் படித்து வருகிறேன்; நாளிதழின் தீவிர வாசகி. சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் சாதனைகளை, வெளி உலகிற்கு எடுத்துக்காட்ட முயற்சிக்கும், பள்ளி தலைமை ஆசிரியர், லெ.சொக்கலிங்கம் மற்றும் தனலட்சுமியின் சாதனையை வெளிக்கொண்டு வந்த, நாளிதழுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து மாணவியின் உயர் படிப்பு முழுவதுக்கும் உதவி செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து வரும் ஜானகியின் மிகப்பெரிய உதவிக்கு, ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்தார், மாணவி தனலட்சுமி.

error: Content is protected !!
Open chat