November 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

புதுக்கோட்டை மாவட்ட மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி முதல்வர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்ட மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி –  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 18.10.2021 அன்று IND-TN-08-MM-201 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மூன்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர் என்றும், மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டதாகவும், மீனவர்கள் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியதாகவும் தெரியவந்ததையடுத்து, அவர்களை மீட்டுத் தருமாறு  தமிழ்நாடு முதலமைச்சர்  ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

மேற்படி மூன்று மீனவர்களில் சுகந்தன் (வயது 22), த/பெ. சுதாகரன் மற்றும் சேவியர் (வயது 38), த/பெ. அருளானந்தம் ஆகிய இரு மீனவர்கள் இலங்கையின் கடற்படை வசம் இருந்த நிலையில், மற்றொரு மீனவரான ராஜ்கிரண் (வயது 28), த/பெ. ராசு என்பவர் இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல் வரப்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் உயிரிழந்த மீனவர்  ராஜ்கிரண் (வயது 28), த/பெ. ராசு என்பவரது குடும்பத்தாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!
Open chat