January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மதுரை தென்மாவட்ட ரயில்களின் நேரம் மாற்றம்

மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் தென்மாவட்ட ரயில்களின் நேரம் வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் மாற்றப்படுகிறது,” என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நவ., 1ம் தேதி முதல் புனலூர் – மதுரை சிறப்பு ரயில் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்படும்.

சென்னை – கொல்லம் சிறப்பு ரயில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இரவு 11.05 மணிக்கும், மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கும் புறப்படும். மறுமார்க்கத்தில் கொல்லம் – சென்னை சிறப்பு ரயில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும். கோவை – நாகர்கோவில் நள்ளிரவு சிறப்பு ரயில் மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கும், விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நள்ளிரவு 1.15 மணிக்கும் புறப்படும்.

மதுரை – ராமேசுவரம் சிறப்பு ரயில் நவ., 4ம் தேதி முதல் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இரவு 7.15 மணிக்கும், சூடியூரில் இருந்து இரவு 7.25 மணிக்கும், பரமக்குடியில் இருந்து இரவு 7.40 மணிக்கும், சத்திரக்குடியில் இருந்து இரவு 7.56 மணிக்கும், ராமநாதபுரத்தில் இருந்து இரவு 8.10 மணிக்கும், உச்சிப்புளியில் இருந்து இரவு 8.32 மணிக்கும், மண்டபத்தில் இருந்து இரவு 8.52 மணிக்கும், பாம்பனில் இருந்து இரவு 9.10 மணிக்கும் புறப்படும். இரவு 10.10 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.

புவனேசுவர் – ராமேசுவரம் சிறப்பு ரயில் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இரவு 7 மணிக்கும், பரமக்குடியில் இருந்து இரவு 7.25 மணிக்கும், ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இரவு 7.55 மணிக்கும் புறப்படும்

error: Content is protected !!
Open chat