January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அறிவியல் முனைப்புக்கும் ஹிந்திக்கும் என்ன தொடர்பு? – சு.வெங்கடேசன் எம் பி

அறிவியல் முனைப்புக்கும் ஹிந்திக்கும் என்ன தொடர்பு?

கல்வி உதவித் தொகை தேர்வு தமிழில் வேண்டும் சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கைக்கு அமைச்சர் பதில்.

ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் திருமிகு ஜிதேந்திர சிங் (தனிப் பொறுப்பு) கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா பற்றி (KVPY) சு.வெங்கடேசன் எம்.பி 25/8/2021 அன்று எழுதி இருந்த கடிதத்திற்கு 12/10/2021 அன்று பதில் தந்துள்ளார்.

கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா (KVPY) என்கிற திட்டத்தின் அடிப்படையில் அறிவியல் முனைப்புள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை ( ரூ 80,000 இல் இருந்து ரூ 1,12,000) வழங்குவதற்கான ஆன்லைன் திறனறித் தேர்வு இரண்டு மொழிகளில் வினாத் தாள் கொண்டதாக மட்டுமே இருக்கும் என்கிற பாரபட்சம் அகற்றப்பட்டு மாநில மொழிகளிலும் தேர்வை நடத்துங்கள் என்று கேட்டு இருந்தேன். தமிழ்நாட்டில் கூடுதல் தேர்வு மையங்கள், விண்ணப்ப கட்டணம் குறைக்கப்படுதல் ஆகிய கோரிக்கைகளையும் வலியுறுத்தி இருந்தேன்.

இது குறித்து பரிசீலிக்கப்பட்டது எனவும், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதால் (W.P. (MD) No. 16064/ 2021)அரசின் நிலையை வாக்கு மூலமாக சென்னை, மதுரை அமர்வுகளில் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அரசின் பதில் தமிழக மாணவர்களுக்கு நீதி தருவதாக இருக்கட்டும். என சு. வெங்கடேசன் எம்பி அறிக்கையில் கூறியுள்ளார்.

error: Content is protected !!
Open chat