January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பொது இடங்களுக்கு வர இரு தவணை தடுப்பூசி கட்டாயம் ஆகலாம் – ஆளுநர் தமிழிசை 

பொது இடங்களுக்கு வர இரு தவணை தடுப்பூசி கட்டாயம் ஆகலாம் – ஆளுநர் தமிழிசை 

பொது இடங்களுக்கு வருவோர் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்ற சட்டம் புதுச்சேரியில் வர வாய்ப்பு உள்ளது என ஆளுநர் தமிழிசை கூறினார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை புதுச்சேரியில் அதிகப்படுத்த வேண்டும் என மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார்.

அதனையொட்டி, கவர்னர் தமிழிசை நேற்று காலை கண்டாக்டர் தோட்டம், பிரயதர்ஷினி நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா என ஆய்வு செய்தார்.

சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். அதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:

தப்பூசி புதுச்சேரியில் செலுத்தும் பணியில் நுாறு சதவீத இலக்கை அடைய ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே முயற்சித்து வருகிறோம். மக்களிடம் தயக்கம் உள்ளது. முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், கட்டாயம் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பாதி கிணறு தாண்டிய கதைதான்.

இரண்டாம் தவணை தடுப்பூசி போடவில்லை என்றால், முதல் தவணை தடுப்பூசி போட்டதன் பலனே இல்லை. அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகம் முழுதும் கொரோனா தொற்று ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி தொடர்பாக மத்திய மந்திரி நேற்று முன்தினம் சில தகவல்களை கூறியுள்ளார். அவர் கூறிய முயற்சிகளை நாம் ஏற்கனவே மேற்கொண்டு வருகிறோம்.

மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன்.இவ்வளவு முயற்சி எடுத்ததால்தான், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் சதவீதம் 70யைகடந்துள்ளது., சில இடங்களில் அதிகமாக தடுப்பூசி செலுத்தி உள்ளோம். அதன் பதிவு தவறாக உள்ளதை சரி செய்யப்பட்டு வருகிறது.

உலகில் சில நாடுகளிலும், புதுச்சேரியில் சில பகுதிகளிலும் கொரோனா தொற்று சற்று அதிகரிக்க துவங்கி உள்ளது. இது அதிகரித்தால் நாம் கேட்டால் கூட தடுப்பூசி கிடைக்காது.

சில மாநிலங்களில், பொது இடங்களுக்கு வர, இரு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆவணம் வைத்திருக்க வேண்டும். என அறிவுறுத்தப்படுகிறது. இதுபோன்ற சட்டம் புதுச்சேரி உள்ளிட்ட மேலும் பல மாநிலங்களில் வர வாய்ப்புள்ளது. அதனால் அனைவரும் இரு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும்.

அனைவரும் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித் தல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதை தொடர வேண்டும் என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

error: Content is protected !!
Open chat