November 30, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

ஜோதிமணி எம்பி கருத்திற்கு ஆட்சியர் த.பிரபுசங்கர்  மறுப்பு

ஜோதிமணி எம்பி கருத்திற்கு ஆட்சியர் த.பிரபுசங்கர்  மறுப்பு

அலிம்கோ நிறுவனம் மூலம் உபகரணங்கள் வழங்க உடனடியாக முகாம் நடத்த கோரியது தொடர்பாக. பார்வை  கரூர் பாராளுமன்ற உறுப்பினர் கடிதங்கள்.

மேற்காணும் கடிதங்களில் கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் மாற்றுத்திறனாளி மக்களுக்கு அலிம்கோ நிறுவனத்தின் மூலம் உபகரணங்கள் வழங்க தேர்வு முகாம்கள் நடத்த கோரப்பட்டுள்ளது. இது குறித்து பதிலளிக்க விழைகிறேன்.

நான் 16.06.2021-ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டேன். அது முதலே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கரூர் மாவட்ட நிர்வாகத்தால் பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அச்சமயத்தில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையினை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அப்போது மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அவை கடந்த இரண்டு வாரங்களாக தான் முழுமையாக தளர்த்தப்பட்டன. எனவே, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடத்த இயலவில்லை. மேலும் கடந்த இரண்டு மாதங்களாக வாரந்தோறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன, அனைத்து அரசு அலுவலர்களும் தொடர்ந்து இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தங்களிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டு தாங்களும் ஏற்றுக்கொண்டீர்கள் என்பதை நினைவு கூற வேண்டுகிறேன். எனவே, முகாம்களை நடத்துவதில் எவ்வித காலதாமதமும் நிகழவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலன் குறித்து மிகுந்த அக்கறையுடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்திலேயே முன்னோடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு விடுதோறும் சென்று தடுப்பூசி வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு 80 % சதவீதத்திற்கும் மேல் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் காணொளி குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், மாற்றுத்திறனாளின் நலம் சார்ந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துமாறு தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியதால் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் கரூரில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு சேவைகளை ஒரே நேரத்தில் வழங்கும் விதமாக ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி முகாம்களை நடத்துமாறு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார்கள். அதன் ஒரு பகுதியான தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மூலமாகவே மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது,

எனவே, தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் இந்த ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் நல முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இ த்த தகவல் தங்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். மேற்கொண்டு மாற்றுதிறனாளிகளுக்கான உபகரணங்களுக்கு தேவையிருப்பின் தாங்கள் கோரியது போல அலிம்கோ நிறுவனத்தின் தேர்வு முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

error: Content is protected !!
Open chat