January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அண்டை மாநிலமான கேரளா தென்காசி மாவட்டதின் மிக அருகில் உள்ளதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல சிறு வியாபாரிகள் கேரளாவிலிருந்து பழைய கவரிங் நகைகள், உடைந்து போன செல்போன்கள் மற்றும் மாத்திரைக் கவர்கள் , உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் ஒயர்கள் போன்றவற்றை குறைந்த விலைக்கு கிடைக்கிறது  என வியாபாரிகள் வாங்கி வந்து அதிலிருந்து உபயோகப் படும் பொருட்களை பிரித்தெடுத்து விற்பனை செய்து வருகின்றனர் ,

மேலும் இதில் சில சமயம் காப்பர் ஒயர்கள் இருப்பதாக கூறப்படுகிறது அந்த காப்பர் வயர்களை தனியாக எடுப்பதற்காக கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகளை தேவையானதை பிரித்தெடுத்து விட்டு , தென்காசியை சுற்றியுள்ள பல பகுதிகளில் தென்காசி கடையம் சாலை ஆசாத் நகர் அருகில் மற்றும் மடத்தூரில் இருந்து திருமலாபுரம் ஊர் வழியாகசிவநாடானூர் , கல்லுரணி அருகில் என பல இடங்களில் இரவு நேரங்களில் தீ வைத்து விடுகின்றனர்

இந்த கழிவுகளால் பொதுமக்கள் இரவு நேரங்களில் மூச்சு விட முடியாமல் பெரும் அவதிப்படுகின்றனர் , மேலும் .அந்த நச்சுப் புகையால் , கர்ப்பிணிப்பெண்கள் , முதியவர்கள் மற்றும் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றனர் ,

இதிலிருந்து பிரிக்கப்படும் காப்பர் கம்பிகளை எந்தவித வரியுமின்றி பழைய இரும்பு என்கிற பெயரில் மீண்டும் நெல்லை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு கொண்டு விற்பனை செய்து வருகின்றனர் இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது ,

பெரும்பாலும் இந்த கழிவுகளை இரவு நேரங்களில் கேரளாவில் இருந்து கொண்டு வரும் போது எந்தெந்த இடங்களில் அதிகாலை நேரங்களில் காவல்துறை இருப்பதில்லை என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப அங்கிருந்து இரும்பு என்ற பெயரில் பல்வேறு கழிவுகளை கொண்டு வந்தேன் எரித்து வருகின்றனர் இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

சாதாரண குப்பை என்று கருதாமல் அதிகாரிகள் அதுகுறித்து  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

error: Content is protected !!
Open chat