November 30, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

மதுரையில் சர்வதேச அளவில் கலைஞர் நினைவு நூலகம், தமிழக அரசு அரசாணை வெளியீடு!

மதுரையில் சர்வதேச அளவில் கலைஞர் நினைவு நூலகம், தமிழக அரசு அரசாணை வெளியீடு!

மதுரையில் சர்வதேச அளவில் கலைஞர் நினைவு நூலகம் அமைத்திட ரூ.99 கோடி செலவில் தொழில் நுட்பச்சாதனங்கள், தளவாடப்பொருட்கள் மற்றும் நூலகம் வாங்கிட ரூ.15 கோடி என்று மொத்தம் ரூ.114 கோடி நிதி ஒதுக்கி அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை வருமாறு:

ஜூன் 5 முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 03.06.2021 அன்று ஏனையவற்றுள் கீழ்க்காணும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது:

சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்:

புத்தகங்கள் மீதும், புத்தகங்களை வாசிப்பதன்மீதும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இருந்த தீராப்பற்றினை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

இதன் வெளிப்பாடாகத்தான். 2010 ஆம் ஆண்டில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 102-வது பிறந்தநாள் அன்று, சென்னை கோட்டூர்புாத்தில், ஆசியாவின் அதிநவீன மிகப் பெரிய நூலகம் எனப் போற்றப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்தார்கள். மாணவர்கள், கல்வி யாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகள், போட்டித் தேர்வு களுக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள், பள்ளிச் சிறார்கள் சமுதாயத்தின் என அனைத்துப் பிரிவினருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக இந்த நூலகம் விளங்கி வருகிறது என்று சொன்னால், அது மிகையாகாது.

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், இத்தகைய அரிய வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய வகையில், மதுரையில் 70 கோடி

ரூபாய் செலவில், கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படும்.”

2 இலட்சம் சதுர அடியில் கலைஞர் பெயரில் நூலகம் முதலமைச்சர் அவர்களின் அறிவிப் பினை செயல்படுத்தும் விதமாக, மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட பொது நூலக இயக்குநரின் கடிதத்தில், மதுரை புதுநத்தம் ரோட்டில் அமைந்துள்ள பொதுப்பணித் துறை குடியிருப்பு வளாகத்தில் 2 இலட்சம் சதுரஅடி பரப்பளவில், முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரில் சர்வதேசத் தரத்திலான நவீன பொது நூலக கட்டடம் கட்ட பொதுப்பணித் துறையின் 2021 – 2022- ஆம் ஆண்டிற்கான விரிவான திட்ட மதிப்பீட்டின் (detailed estimate) அடிப்படையில் ரூ.99.00/- கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்டுவதற்கான நிர்வாக அனுமதியும், இந்நூலகத்திற்குத் தேவையான நூல்கள், மின்நூல்கள், இணைய வழி பருவ இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி இதழ்கள் கொள்முதல் செய்வதற்கு ரூ.10.00 கோடியும், தொழில்நுட்ப சாதனங்கள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5.00 கோடியும் என மொத்த செலவினத் தொகையான ரூ.114/- கோடிக்கு (ரூபாய் நூற்று பதினான்கு கோடி மட்டும்) நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக அனுமதி வழங்குமாறு பொது நூலக இயக்குநர் கோரியுள்ளார். முதலமைச்சர் அவர்களால் அறிவிக் சுப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, பொது நூலக இயக்குநரின் கருத்துருவினை கவளமுடன் ன் பரிசீலனை செய்த அரசு, அதனை ஏற்று, சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் புது நத்தம் ரோட்டில் அமைந்துள்ள பொதுப்பணித் துறை குடியிருப்பு வனாகத்தில் 2 இலட்சம் சதுர அடி பரப்பளவில், கலைஞர் நினைவு நூலசு கட்டடத்தை பொதுப்பணித் துறையின் 2021:2022-ஆம் ஆண்டிற்கான விரிவான திட்ட மதிப்பீட்டின் (detailed estimate) அடிப்படையில் கட்டுவதற்கு ரூ.99.00/- கோடியும் (ரூபாய் தொண்ணூற்று ஒன்பது கோடி மட்டும்), இந்நூலகத்திற்குத் தேவையான நூல்கள், மின்நூல்கள், இணைய வழி பருவ இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி இதழ்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு ரூ.1000 கோடியும், (ரூபாய் பத்து கோடி மட்டும்) தொழில்நுட்ப சாதனங்களை கொள்முதல் செய்வதற்கு ரூ.5.00 கோடியும், (ரூபாய் ஐந்து கோடி மட்டும்) என மொத்த செலவினத் தொகையான ரூ.114.00/- கோடிக்கு (ரூபாய் நூற்று பதினான்கு கோடிக்கு மட்டும்) நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கலாம் என முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட செலவினத்தை மேற்கொள்ள பொது நூலக இயக்குநருக்கு அதிகாரமளிக்கப் படுகிறது.

பொது நூலக இயக்குநருக்கு அதிகாரம்!

ஒப்பளிக்கப்பட்ட செலவினம் ஒரு “புதுப்பணி” குறித்த செலவினமாகும். இதற்கு சட்டமன்றப் பேரவையில் ஒப்புதல் பின்னர் பெறப்படும். மேற் குறித்த ஒப்புதலை எதிர்நோக்கி இச்செலவினம் முதற்கண் எதிர்பாராச் செலவின நிதியிலிருந்து முன்பணம் பெறுவதன் மூலம் மேற்கொள்ளப்படும். முன்பணத்தை அனுமதிக்கின்ற ஆணைகள் நிதித் (வரவு செலவு பொது: துறையில் தனியாக பிறப்பிக்கப்படும். அடுத்து வரும் துணை மானியக் கோரிக்கையில் *இச்செலவினம் சேர்க்கப்பட்டு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பெறும் வகையில் நடப் பாண்டிற்கு தேவைப்படும் செல வினத்தை சரியாகக் கணக்கிட்டு, எதிர்பாரா செலவின நிதியிலிருந்து முன்பணம் பெறத் தேவையான விண்ணப்பத்தை எதிர்பாரா செல்வின நிதி விதிகள் 1963ல் உள்ள அட்டவணை & படிவத்துடன் இவ்வரசாணையின் நகலுடன் இணைத்து நிதித் (வரவு செலவு பொது 1) துறைக்கு நேரடியாக அனுப்பிவைக்குமாறு பொது நூலக இயக்குநர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

மேலும், இக்கூடுதல் செலவினத் திற்கான உரிய கருத்துருவை 2021-22 ஆம்ஆண்டிற்கான துணை மதிப்பீடுகள் திருத்த மதிப்பீடு / இறுதி திருத்த நிதியொதுக்கத்தில் சேர்ப்பதற்கு தவறாது உரிய நேரத்தில் நிதித் (வரவு செலவு பொது 1, கல்வி-11) துறைக்கு அனுப்பிவைக்குமாறு பொது நூலசு இயக்குநர் அவர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்.

மேற்கண்ட கணக்குத் தலைப்பிற்கு பொது நூலக இயக்கக இயக்குநர், மதிப்பீடு / கணக்கு நேரமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரியாவார்.

இவ்வரசாணை நிதித் துறையின் அ.சா.எண்.50976/கல்வி-11.2021, நாள் 23.11.2021-இல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது. இதற்கான கூடுதல் நிதியொதுக்கப் பேரேடு எண்.919 (தொள்ளாயிரத்து பத்தொன் பது),

இவ்வாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

error: Content is protected !!
Open chat