November 30, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

சாதி பேதம் காட்டாது முறையாக அடக்கம் செய்யும் கிராமங்களுக்குப் பரிசுத் தொகை – தமிழக அரசுக்குப் பாராட்டு! – கி.வீரமணி

சாதி பேதம் காட்டாது முறையாக அடக்கம் செய்யும் கிராமங்களுக்குப் பரிசுத் தொகை – தமிழக அரசுக்குப் பாராட்டு!திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை!

மனிதன் செத்தாலும் சாதி சாவதில்லை என்ற நிலையில், அந்த நிலையை மாற்றி அமைக்க தனிச்சட்டம் இயற்றி, சமத்துவ நிலையை உருவாக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

நம்நாடு “சுதந்திரம்” பெற்று 75 ஆம் ஆண்டைக் கொண்டாடும் நிலையில், இன்னமும் நம் மக்களிடையே சுடுகாடு. இடுகாட்டில் கூட ஜாதி வெறி தலைதூக்கி ஆடுவதோடு, மனிதர்கள் இறந்த பிறகு, ஜாதியும், வெறியும் சாகாமல் இருப்பது மட்டுமல்ல: சிறிதுமற்ற மட்டு மனிதத்தன்மை முறையில், மயானங்களில் பேதம்: சுடுகாட்டிற்குச் செல்வதற்கு ஒழுங்கான பாதை வசதிகள் கிடையாது. கிராமப்புறங்களில் ஜாதிவெறி தெருக்களில் படமெடுத்தாடி, சவ ஊர்வலத்திலும் கூட ஜாதிச் சண்டைகள் நடைபெறும் அவலம் ஒரு தேசிய அவமானம் அல்லவா?

தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்திற்கு 3 கிராமங்கள் வீதம் 11 கிராமங்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை ஜாதிப் பிரிவினை காட்டாது முறையாக நடக்கும் ஜாதி வேறுபாடுகளற்ற எடுத்துக்காட்டான கிராமங்களுக்கு அப்பரிசுத்தொகை வழங்கப்படும் என்பதோடு அதற்கென பரிசுத்தொகை தமிழ்நாடு அரசு ஒதுக்கி அரசாணை வழங்கியுள்ளது – பெரிதும் பாராட்டி வரவேற்கத்தக்கதாகும்.

அதைவிட, மயானத் திற்குச்செல்லும் பாதைகளைக்கூட ஊரைச் சுற்றித்தான் – சிலஜாதித் தெருக்களில் செல்லக்கூடாது

மனிதர்களின் அநாகரீக செயல் என்றெல்லாம் தடுப்ப அனைத்தும் கடுமையான கிரிமினல் குற்றமாக்கப்பட்டு, அந்த கிராமத்திற்குரிய சலுகைகளைக் கூட ரத்து செய்து அபராதம் விதித்து, சமத்துவம் நிலை நாட்டப்படவேண்டும்.

“சமரசம் உலாவும் இடமே’ என்று இடுகாடுகள் பற்றி பாடினாலும் கூட நடைமுறையில் இன்னமும் கிராமங்களில் பாதைகள் இல்லாததற்கு, தங்கள் வழியே ‘கீழ்ஜாதிக்காரர் சவம்’ செல்லக்கூடாது என்று சில ‘வாழும் ‘செத்தாருள் வைக்வைக்கப்பட வேண்டிய மனிதர்களின் அநாகரிகச் செயல் வளர விடக்கூடாது தடுக்கப்படல் வேண்டும்.

பரிசுகள் ஒருவகை என்றாலும் தனிச்சட்டமும் கொண்டுவரப்படு அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறியுள்ளப்படி சமத்துவம் சுதந்திரம், சகோதரத்தை வாழ்நாளில்  அனுபவிக்க முடியாததை அனுபவிக்க அதைத்தவிர என்ன வழி,

சில ஊர்களில் நீதி மன்றத் தீர்ப்புகளையும் மதிக்காமல், சட்டம் ஒழுங்குப்பிரச்சினையை உருவாக்கி, ஜாதிக்கலவரம் நடத்தி, குளிர்காயப் பார்க்கும் கீழமை இன்னமும் இருப்பதைவிட அவலம் வேறு இருக்கமுடியுமா?

சமூகத்தின், ஜாதி ஒழிப்பைக் கொள்கையாகக் கொண்ட இந்த திராவிடர் ஆட்சி அதைச் செய்யா விட்டால், வேறு எந்த ஆட்சியில் செய்ய முடியும்.

தனிச் சட்டம்!

இதற்குநமது முதலமைச்சரும், அவரது அரசும் தனிச்சட்டமே கொண்டு வந்து நடைமுறைப்படுத்தும் வழி முறைகளையும் வகுப்பதற்கு ஆவன செய்ய வேண்டுமென. உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்! ஜாதி ஒழிப்பில் முத்திரைப் பதிக்கும் உயிர் காக்கும் மருத்துவமனைகளில் இல்லாத காட்டப்படாத பேதம் இறந்த பிறகு, சுடுகாட்டில் தேவையா? கடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் பாதையில் அது தலைக் காட்டலாமா?

கடந்த 21112021 அன்று நடைபெற்ற மாநில பகுத் தறிவாளர் கழகக் கலந் துரையாடல் கூட்டத்தில் இதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை தமிழ்நாடு அரசின், குறிப்பாக முதலமைச்சரின் மேலான கவனத்திற்கு வைக்க விரும்புகிறோம் இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கையில் தெரிவித்யதுள்ளார்.

 

 

 

error: Content is protected !!
Open chat