November 30, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

மழை நிவாரண தொகையை மத்திய அரசு தாமதமின்றி வழங்க சிபிஎம் கோரிக்கை 

மழை நிவாரண தொகையை மத்திய அரசு தாமதமின்றி வழங்க சிபிஎம் கோரிக்கை

மழை, வெள்ள பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் நிவாரணம் வழங்குக; வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்கள் நீரால் சூழப்பட்டுள்ளது.

தொடர் மழை மற்றும் உபரிநீர் வெளியேற்றம் காரணமாக, வயல் வெளிகள் நீரில் மூழ்கியும் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நெல், வாழை, மணிலா, உளுந்து, மரவள்ளி, பயிறு, பருத்தி, வெங்காயம் ஆகிய பயிர்கள் அழிந்து போயுள்ளன. ஆடு, மாடு, கோழி ஆகிய கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிறுக்கு ஏக்கருக்கு ரூ 8000, மறு நடவு செய்யும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்குவது என்றும் அறிவித்துள்ளது.

இதனால் மழையால் பயிர் அழிந்து பாதிக்கப்பட்டுள்ள பல லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழக அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து, நடவு செய்து அழிந்து போன பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30,000, தோட்டக்கலை பயிர்கள், கால்நடைகள் இறப்பு ஆகியவற்றிற்கு பாதிப்புக்கேற்ப பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க முன்வர வேண்டுமென்று மாநிலக்குழு கோருகிறது.

வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும், தொடர் மழையின் காரணமாக வேலையிழந்து வருமானமின்றி தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் ரூ 5,000/- நிவாரணம் வழங்க வேண்டுமென்று #CPIM கோருகிறது.

மழை மற்றும் இயற்கை பேரழிவு நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு அரசு கோரியுள்ள தொகையை ஒன்றிய அரசு தாமதமின்றி முழுமையாக வழங்க வேண்டுமென்று மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

 

error: Content is protected !!
Open chat