January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கல்

வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கல்

கடையம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் இலவசமாக மரக்கன்றுகள் விநியோகம். :. கடையம் வட்டாரத்தில் 2021-2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கத்தின் கீழ் தேக்கு, வேங்கை, செம்மரம் மரக்கன்றுகள் உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. கடையம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சுற்றுச்சுழலை பாதுகாக்கவும் , விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழ்நிலையை உருவாக்கி, நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து ஊராட்சி ஒன்றிய தலைவி. செல்லம்மாள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடையம் ஊராட்சி ஒன்றிய தலைவி. செல்லம்மாள், வேளாண்மை உதவி இயக்குநர்.ஏஞ்சலின் பொன்ராணி, உதவி விதை அலுவலர் மாரியப்பன், வேளாண்மை உதவி அலுவலர் கமல்ராஜன் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார்கள். வேளாண்மை உதவி அலுவலர்கள், ஜெகதீஸ்வரன்,பால்துரை, அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் சுபா உட்பட பல விவசாயிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!
Open chat