January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டி போராட்டம் 

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டி போராட்டம் 

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோயில்

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோயிலில்
கடந்த 15 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூபாய் 30 ஆயிரம் மலர் செடிகள் சவுக்கு உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 50 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வலியுறுத்தியும் தண்ணீர் சூழ்ந்த வீடுகளுக்கு ரூபாய் 10 ஆயிரமும் சுவர் இடிந்து விழுந்தவீடுகளுக்கு ரூபாய் 20 ஆயிரமும் நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காட்டு மன்னார் கோயில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் மூர்த்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காட்டுமன்னார்குடி வட்ட செயலாளர் ஜாகிர் உசேன் விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் வெற்றிவீரன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமராட்சி ஒன்றிய செயலாளர் மனோகரன் விவசாயிகள் சங்க வட்ட பொருளாளர் புகழேந்தி வட்ட துணைத் தலைவர் தனபால் விவசாய தொழிலாளர் சங்க வட்ட துணைச்செயலாளர் சிங்கார வேலு ஆகியோர் கலந்துகொண்ட மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது பின்பு வட்டாட்சியர் ராமதாஸ் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது

நன்றி

பாவூர் செய்திக்காக
கடலூர் மாவட்டம்                                  செய்தியாளர் விஜயகுமார்

error: Content is protected !!
Open chat