January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மகன் ஆணவக் கொலை, உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம் 

மகன் ஆணவக் கொலை, உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம் 

சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே கிழக்கு ராஜாபாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துவேல், கடந்த செப்டம்பர் 12-ம் தேதி ஊரிலுள்ள ஏரியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரின் டீ சர்ட்டில் ரத்தக்கறை இருந்துள்ளது. மேலும் ஏரிக்கரை படியிலும் இரத்தக்கரை இருந்துள்ளது. முத்துவேலின் ஒரு செருப்பு ஏரி கறையின் மேலும், ஏரிக்குள் ஒரு செருப்பும் இருந்துள்ளது. இதை அடுத்து முத்துவேலின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் முத்துவேல் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.

முத்துவேல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச்சேர்ந்த சிலருக்கு முடிவெட்டும்போது, “அவங்களுக்கு (பட்டியல் சமூகம்) வெச்ச சவரக்கத்தியை எங்களுக்கு வைப்பியா” எனக் கூறி சி.பி.பெரியசாமி என்பவர் முத்துவேலை தாக்கியதாக கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு சாதியை கூறி முத்துவேலை அப்பகுதி சாதி இந்துக்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் முத்துவேல், ஏரியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரையடுத்து “பத்து லட்சம் தர்றோம். அமைதியா போயிடு’ முத்துவேல் உடலை வாங்கி அடக்கம் செய்து விடு” என்றும் அதே பகுதியைச் சேர்ந்த சாதிஇந்துக்கள் முத்துவேலின் பெற்றோரை மிரட்டியுள்ளனர்.

சாதி பிரச்சனையால் தன் மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படும் முத்துவேலின் பெற்றோர், மணிகண்டன், பெரியசாமி, மாணிக்கராஜா, சி.பி.பெரியசாமி என்ற நான்கு பேரும்தான் முத்துவேல் மரணத்திற்கு காரணம் என காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். மேலும் 70 நாட்களுக்கு மேலாக தன் மகனின் உடலை வாங்காமல், தன் மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வருகின்றனர் முத்துவேலின் பெற்றோர்.

error: Content is protected !!
Open chat