January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கடைவீதிகள், மார்கெட் பகுதிகளில் தென்காசி காவல்துறையினர் விழிப்புணர்வு

தென்காசியில் பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கி, அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொது மக்களிடம்,காவல் துறையினர் தற்போது வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் குறித்தும், முகக் கவசம் குறித்தும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிறுத்தங்கள், கடைவீதிகள்,மார்கெட் போன்ற பகுதிகளில் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலமாகவும் முக கவசம் வழங்கியும் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி பஜார் பகுதிகளில் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அவர்கள் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு முகக் கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனைவருக்கும் முகக் கவசம் வழங்கினார்.

பின்னர் பொதுமக்களிடையே பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவ துவங்கியுள்ளதால் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், முகக் கவசம் அணிந்து நம்மை கொரோனா தொற்று ஏற்படாமல் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் மணிமாறன், அவர்கள் காவல் ஆய்வாளர் பாலமுருகன் அவர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்..

error: Content is protected !!
Open chat