January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கோவிட் பணியாளர்களின் பணிகள்

பெரு நகர சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத் துறை

கோவிட் பணியாளர்களின் பணிகள்

1. கோவிட் நோய் தொற்றுள்ள, அறிகுறிகள் ஏதும் இல்லாத அல்லது லேசான அறிகுறிகள் உள்ள 45 வயதிற்கு உட்பட்டவர்களை வீட்டு தனிமையில் வைக்கலாம். இவர்களுக்கு வீட்டில் காற்றோட்டமுள்ள தனி அறை மற்றும் கழிப்பிட வசதிகள் இருக்க வேண்டும். இவர்கள் 5 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும்.

2. நோயாளிகளை நாளான்றுக்கு ஒரு முறை வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தல்,

3. நோயாளிகளுக்கு காய்ச்சல் உள்ளதையும், ஆக்ஸிசன் அளவையும் (சுவாச வாயு அளவு கருவி – Pulse Oxymeter கொண்டு கண்டறிய வேண்டும்.

4. தனிமையில் இருக்கும் நோயாளிகளுக்கு மளிகை, உணவு மற்றும் இதர அவசிய பொருட்களை வாங்கி தர வேண்டும்.

5. ஒவ்வொரு நோயாளிகளுக்கும் தேவையான வைட்டமின், zinc மாத்திரை காய்ச்சல் மாத்திரை கொடுக்க வேண்டும்.

6. நோயாளிகள் உபயோகித்த பொருட்களை போட மஞ்சள் பைகளை கொடுக்க வேண்டும்.

7. நோயாளிகளிடம் கோவிட் கட்டுப்பட்டு அறை எண்களை கொடுக்க வேண்டும்.

8. நோயாளிகளிடமிருந்து அழைப்பு வந்தால் அவர்களின் அவசரம் கருதி

தாமதமின்றி செயல்பட வேண்டும்.

9. நோயாளியின் வீட்டிலுள்ள மற்ற நபர்களையும் தினமும் கண்காணிக்க வேண்டும். நோயாளியின் வீட்டிலுள்ள மற்ற நபர்களையும்

எவருக்கேனும் நோய் அறிகுறி தென்படுமெனில் அவர்களை கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

10. நோயாளியின் வீட்டின் முன்புறம் மற்றவர்கள் தெரியும் வண்ணம்

நோட்டீஸ் ஒட்டப்ட வேண்டும்.

11. நோயாளிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டாலோ, அதிக காய்ச்சல் இருந்தாலோ அல்லது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு இருந்தாலோ மருத்துவமனைக்கு உடனடியாக செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்த வேண்டும்.

12. நோயாளியிடம் கணிவுடனும், பண்புடனும், அன்புடனும் மற்றும் உடை நெறியுடன் அனுக வேண்டும்.

13. ஒவ்வொரு பணியாளரும் முகக்கவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும்.

14. ஒவ்வொரு நோயாளி பற்றிய குறிப்புகள் பணியாளர்களின் பதிவேட்டில் பதியப்பட வேண்டும்.

error: Content is protected !!
Open chat