சர்ச்சை சாமியார் (?) நித்யானந்தாவின் உடல்நல குறைவு காரணமாக மறைந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவி வந்தது. சில காலம் வரை இவரை பற்றி எந்தவித செய்தியும் இல்லாமல் இருந்து வந்த மீடியாவில் தற்போது இந்த தகவல் வைரலாக பரவிச்சு. இதையடுத்து நித்யானந்தா தான் இன்னும் சாகவில்லை என்று போட்டோ எல்லாம் போட்டு விளக்கம் அளிச்சிருக்கார்.
அதில் அவர் உடல் முன்பு போல் இல்லாமல் எலும்பும் தோலுமாக காட்சியளிக்கிறது. மேலும் அவர் எனக்கு இருபத்தி ஏழு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். அதிலிருந்து நான் இன்னும் வெளியே வர முடியவில்லை. பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் உள் வாங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களால் கூட எனக்கு என்ன பிரச்சினை என்று கண்டறிய முடியவில்லை. அதைப்பற்றி தொடர்ந்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் என்னால் சரியாக உணவு உண்ண முடியவில்லை தூங்க முடியவில்லை என் உடலுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. எனக்கு தெரிந்தவர்களையும், பழைய விஷயங்களையும் கூட என்னால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களை கண்டறிவதில் நான் சிரமப்படுகிறேன். ஆனால் நான் சாகவில்லை, சமாதி நிலையில் இருக்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று திரும்புவேன். இவ்வளவு பிரச்சினையிலும் நித்திய பூஜை மட்டும் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் இறந்துவிட்டார் என்று வந்த செய்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நான் சாகவில்லை என்ற நித்யானந்தாவின் இந்த அறிக்கை தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
More Stories
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும் – கேப்டன் கோரிக்கை
சதுரகிரி கோவிலுக்கு 5 நாட்கள் மட்டும் அனுமதி
குற்றாலதில் தட்டித் தூக்கிய அதிமுக