ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் தமிழகம் முழுவதும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. தற்கொலைகள் தொடர்ந்தாலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடுக்கத் தமிழக அரசு தவறுகின்றன. பணம் கொடுத்ததால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தொடர்பான விளம்பரங்களில் நடித்தோம் என்ற சமூக அக்கறை இல்லாத, பொறுப்பற்ற நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள். டாஸ்மாக் மதுக்கடைகளை போல ஆன்லைன் சூதாட்டங்களை தமிழக அரசே ஊக்குவிக்கிறதா..? சந்தேகம்? ஆட்டைக் கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதை போல தற்போது பள்ளி மாணவர்களையும் விட்டு வைக்காத ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் கொடூரம். தடுக்க தமிழக அரசு வலுவான சட்டம் கொண்டு வருமா..? இல்லை எவர் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன என்று அமைதி காக்குமா..? இது மக்கள் நலன் காக்கும் அரசா..? அல்லது மக்களின் வீழ்ச்சியை கண்டு ரசிக்கும் அரசா..? ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு விடை கொடுக்கப்படுமா..? விடை சொல்லுமா தமிழக அரசு..? என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்
More Stories
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும் – கேப்டன் கோரிக்கை
சதுரகிரி கோவிலுக்கு 5 நாட்கள் மட்டும் அனுமதி
குற்றாலதில் தட்டித் தூக்கிய அதிமுக