முதல்வருக்கு கேப்டன் கடிதம்
TNPL நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற கடந்த 1 ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழக அரசு கவனத்திற்கு
இரண்டுலட்சம் டன் பேப்பர் மட்டுமே உற்பத்தி செய்யும் SPB ERODE நிறுவனம் அதிகபட்சமாக 194 கோடி லாபத்தை ஈட்டுகிறது. ஆனால் TNPL 6 லட்சம் டன்னுக்கு மேல் பேப்பர் மற்றும் பேப்பர் அட்டை உற்பத்தி மற்றும் தினம் 900 டன் சிமெண்ட் உற்பத்தி, கரண்ட் உற்பத்தி போன்ற 10 தொழில்களை செய்யும் TNPL நிறுவனம் இழப்பு ஏற்படுவதாக காட்டுகிறார்கள். எனவே தாங்கள் அரசு கூடுதல் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், சரியாக செயல்படாத அதிகாரிகளை வேறு துறைகளுக்கு மாற்றிவிட்டு நேர்மையான IAS அதிகாரி ஒருவர் மூலம் குழு அமைத்து ஆய்வறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் தான் நிர்வாகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லலாம். தங்கள் அரசு கூடுதல் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொள்கிறேன். என இதுபோன்று தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அந்த நிறுவனங்களில் தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்து, நஷ்டத்தில் இயங்கும் அந்த நிறுவனங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் அந்த நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதாடு, லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியும். கொண்டு செல்லும் வகையில்
TNPL நிறுவனத்தில் தேவையான அதிகாரிகள் இருக்கும் நிலையில், கடந்த ஆட்சி காலத்தில் 469 அதிகாரிகளை பணி நியமனம் செய்து, அவர்களின் ஊதியம் மற்றும் அவர்களது பிற செலவினங்கள் மூலமாக வருடம் சுமார் 70 கோடி முதல் 100 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளை பிற அரசுத்துறைக்கு மாற்றினால் மட்டுமே, TNPL நிறுவனத்தை காப்பாற்ற முடியும். இந்த ஆலையின் பொருளாதார இழப்பை சீர்படுத்தவும், TNPL நிறுவனம் லாபகமாக செயல்பட்டால் தான் இப்பகுதியில் வாழும் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, மக்களை காப்பாற்ற முடியும்.என கேப்டன் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
More Stories
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும் – கேப்டன் கோரிக்கை
சதுரகிரி கோவிலுக்கு 5 நாட்கள் மட்டும் அனுமதி
குற்றாலதில் தட்டித் தூக்கிய அதிமுக