கோவை மாவட்டம் மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் வெள்ளிங்கிரி மலை உள்ளது. இந்த மலையில் சிவபெருமான் கோயில் உள்ளது. நேற்று வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கோயிலில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர் சேகர்பாபு மலை மீது ஏறிச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த மலைப் பாதைகள் ஆபத்தானவை என்பதால் அதிகாரிகளே மலை ஏறி ஆய்வு செய்யக் கொஞ்சம் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் நேற்று காலை 7 மணியளவில் மலை ஏறத் தொடங்கி கோயில்களை ஆய்வு செய்துவிட்டு இன்று காலையில் தான் அமைச்சர் சேகர்பாபு கீழே இறங்கியுள்ளார். கிட்டத்தட்ட 22 மணி நேரம் நடைப்பயணம் செய்து வெள்ளியங்கிரி மலைக்கோயிலை ஆய்வு செய்து இருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.
More Stories
கல்லூரி கனவு நிகழ்ச்சி முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னையில் அஞ்சலக குறைதீர்ப்புகூட்டம்
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட டிவி நிருபர் உள்பட 3 பேர் கைது