அதிமுகவிற்கு ஆதரவு அளித்த திமுக கவுன்சிலர்
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.
அதுவும் திமுக கவுன்சிலர் ஒருவர் அதிமுகவுக்கு ஆதரவு அளித்ததால் தான் இந்த அதிசயம் அரங்கேறியிருக்கிறது.புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலம் பேரூராட்சி அந்தஸ்து கொண்ட ஊர் பொருளைப் போலவே இங்கும் உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது கடும் போட்டி நிலவியது.
வெறும் எட்டு வார்டுகளை கொண்ட இந்த பேரூராட்சியில் திமுக மற்றும் அதிமுக தலா 4 இடங்களை கைப்பற்றியது.இரு கட்சியும் சம பலத்தில் இருந்ததால் தலைவர் தேர்தலில் இழுபறி நீடித்தது. இரு முறை நடந்த தேர்தலில் அதிமுக உறுப்பினர்கள் மட்டுமே ஆஜரான நிலையில் கோரம் இல்லாததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
மூன்றாவது முறையாக இன்று தேர்தல் நடந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக திமுக கவுன்சிலர் ஒருவர் அதிமுக ஆதரவாக வாக்களித்து விட்டார்.இதன் காரணமாக அதிமுகவைச் சேர்ந்த கணேஷ் தாமோதரன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆளுங்கட்சியான திமுக கவுன்சிலர் ஒருவரே எதிர்க்கட்சியான அதிமுக வெற்றி பெற வைத்ததற்கு காரணம் கவனிப்பு தான் என்று பலர் வெளிப்படையாக சொல்லிக் கொண்டாலும், திமுகவினர் மத்தியில் இந்த நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .
பிற்பகல் நடந்த துணைத்தலைவர் தேர்தலிலும் தங்கபாண்டியன் என்று அதிமுக கவுன்சிலர் போட்டியின்றி தேர்வாகியிருக்கிறார்.அதிமுகவினர் எந்த அளவுக்கு லாவகமாக செயல்பட்டு பதவியை கைப்பற்றியுள்ளனர் .மேலும் துணைத் தலைவர் பதவியும் அதிமுக வசமே சென்று விட்டது ஏன் திமுக கோட்டை விட்டது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் விழிக்கின்றனர் திமுகவினர்
More Stories
கல்லூரி கனவு நிகழ்ச்சி முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னையில் அஞ்சலக குறைதீர்ப்புகூட்டம்
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட டிவி நிருபர் உள்பட 3 பேர் கைது