மத்திய அரசின் அனைத்துத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் மாபெரும் திட்டத்தை பிரதமா் திரு நரேந்திர மோடி கடந்த மாதம் தொடங்கி வைத்ததை அடுத்து, நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வேலை வாய்ப்பு விழாவின் இரண்டாம் கட்டம், சிவகங்கை மாவட்டம், இலுப்பைக்குடியில் உள்ள இந்தோ- திபெத் எல்லைக் காவல்படை காவலர் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ஏ. நாராயணசாமி, 258 பேருக்கு எல்லை காவல் படை, இந்தோ- திபெத் எல்லைக் காவல்படை, ராணுவ ஆள்சேர்ப்பு வாரியம், ரயில்வே, பாரத ஸ்டேட் வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு பணிகளுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு மதுசூதன் ரரெட்டி காவல்துறை துணைத் தலைவர் திரு அக்சல் சர்மா, காமண்டர் சுரேஷ் குமார் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
More Stories
முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு…கே.எஸ்.ஆர்
சிலையை அகற்றிய தாசில்தார் , டி.எஸ்.பி மாற்றம்
இளம் விஞ்ஞானிகளை மேம்படுத்த தேசிய பிரைன்ஸ்டோர்மிங் அமர்வு