இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டு பால் உற்பத்தியில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் திகழ காரணமாக விளங்கியவரும், கூட்டுறவு (அமுல்) பால் நிறுவனத்தின் அடையாளமாய் இருப்பவரும், “பால்வளத்துறையின் தந்தை” என்றழைக்கப்படும் டாக்டர். வர்கீஸ் குரியன் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளிற்கு பால் பாக்கெட்டுகளில் கடந்த ஆண்டு அவரது புகைப்படத்தை இடம்பெறச் செய்து கெளரவப்படுத்திய ஆவின் நிர்வாகம் நடப்பாண்டில் அவரை கண்டு கொள்ளாமல் விட்டிருப்பதையும், குறைந்தபட்சம் பால் பாக்கெட்டுகளில் “தேசிய பால் தினம் வாழ்த்துகள்” என அச்சிட்டு வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணித்திருப்பதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும் ஆண்டுதோறும் இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ், இஸ்லாமியர்கள் கொண்டாடும் ரம்ஜான் அனைத்து தரப்பினருக்குமான ஆங்கில புத்தாண்டு நாட்களில் வாழ்த்துச் செய்தி வெளியிடுவதை மட்டுமே காலங்காலமாக ஆவின் கடைபிடித்து வரும் நிலையில் சரஸ்வதி பூஜை, ஆயுதப்பூஜை பண்டிகைகளுக்கு ஆண்டுதோறும் வாழ்த்துச் செய்தி வெளியிடாத சூழலில் அதை வைத்து அரசியல் செய்த இந்துத்துவ அமைப்புகளுக்கு அடிபணிந்த திமுக அரசு நடப்பாண்டில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் அதற்கான வாழ்த்துச் செய்தியை வெளியிட்டு பரிகாரம் தேடிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பால்வளத்துறையின் அடிநாதமாக, ஆணிவேராக திகழும் டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 26ம் தேதி தேசிய பால் தினமாக இந்தியா முழுவதும் கூட்டுறவு மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் சார்பில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டுகளில் அவரது படத்தையும், “தேசிய பால் தினம்” குறித்த வாழ்த்துச் செய்தியையும் இடம்பெறச் செய்யாமல் விட்டிருப்பதும், பிற்பகல் 1.00மணியளவில் ஆவின் டுவிட்டர் பக்கத்தில் பெயரளவிற்கு மட்டும் வாழ்த்துச் செய்தி பதிவிட்டிருப்பதும் ஏற்புடையதல்ல.
தேசமே கடைபிடிக்கும் தேசிய பால் தினத்தையும், வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட பால்வளத்துறையின் தந்தை வர்கீஸ் குரியன் அவர்களையும் புறக்கணித்தமைக்காக தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும், அத்துடன் இனி வருங்காலங்களில் இது போன்று நடைபெறாமல் பார்த்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.
http://

அனைவருக்கும் இனிய தேசிய பால் தின வாழ்த்துக்கள்….#ஆவின் #aavin #NationalMilkDay pic.twitter.com/0BoARfPnGw
— Aavin TN (@AavinTN) November 26, 2022

அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆவின் பால் பாக்கெட்டுகளை அதிகளவில் வாங்கி பயன்படுத்துவது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்கள் எனும் போது அவர்களில் இருந்து மாவட்டந்தோறும் சிறந்த வாடிக்கையாளர்களையும், ஆவினின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் பால் முகவர்களில் சிறப்பான முறையில் செயல்படுவர்களையும் தேர்ந்தெடுத்து தேசிய பால் தினமான இன்று கெளரவப்படுத்தாமல் வெள்ளிக்கிழமையான (25.11.2022) நேற்றைய தினமே சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் திரு நாசர் அவர்கள் தலைமையில், நிர்வாக இயக்குனர் திரு. சுப்பையன் ஐஏஎஸ் அவர்கள் முன்னிலையில் அவசர, அவசரமாக வெறும் பெயரளவிற்கு மட்டும் தேசிய பால் தினத்தை கொண்டாடி வசதி படைத்த பெண்மணியை அழைத்து அவருக்கு சிறந்த வாடிக்கையாளராக பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கெளரவப்படுத்தியிருப்பதும், பால் முகவர்களை புறக்கணித்திருப்பதும் தவறான முன்னுதாரணமாகும்.என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்
More Stories
ஆவின் விலையை உயர்ந்துள்ளதாக முதல்வர் பாராட்டு -அண்ணாமலை
ஆவினை அழிவிற்கே கொண்டு செல்கிறதா நிர்வாகம்..?
ஆவின் பால் தட்டுப்பாடா?