May 29, 2023

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பிரதமர் நரேந்திர மோடி, பப்புவா நியூ கினியா பிரதமருடன் சந்திப்பு
இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் 3-வது உச்சிமாநாட்டின் ஒருபகுதியாக, மே 22, 2023 அன்று போர்ட் மோர்ஸ்பி-யில், பிரதமர் திரு. நரேந்திர மோடி, பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவுடன் இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
3-வது உச்சி மாநாட்டை இணைந்து நடத்துவதற்காகவும், தமக்கு உற்சாக வரவேற்பு அளித்தமைக்காகவும், அந்நாட்டுப் பிரதமர் திரு. ஜேம்ஸ் மராப்பேவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

சுகாதாரம், திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு பரஸ்பர நல்லுறவை மேலும் பலப்படுத்துவது குறித்து விவாதித்தனர். காலநிலை மாறுபாடு சார்ந்த விஷயங்கள் மற்றும் இருநாடுகளின் மக்களுக்கிடையே தொடர்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர். பசிபிக் தீவு நாடுகளின் விருப்பங்களுக்கு மரியாதை மற்றும் முன்னுரிமை அளிப்பதற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என பிரதமர் .நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும், ஜேம்ஸ் மராப்பே-வும் டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டனர். மொழிபெயர்க்கப்பட்ட இந்த நூல், பிரபல மொழியியலாளர் திருமதி சுபா சசீந்திரன் மற்றும் பப்புவா நியூ கினியாவின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாண ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் ஆகியோர் இணைந்து எழுதியதாகும். இந்த நூலிற்கு, ஜேம்ஸ் மராப்பே முன்னுரை எழுதியுள்ளார். இந்தியாவின் சிந்தனைகள் மற்றும் கலாச்சாரத்தை பப்புவா நியூ கினியாவில் பாதுகாக்க தங்களின் உன்னதப் பங்களிப்பை அளித்த நூலின் ஆசிரியர்கள் இருவருக்கும், பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்

error: Content is protected !!
Open chat