May 29, 2023

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சர்வதேச கருத்தரங்கை புதுச்சேரி நடத்துகிறது

பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு எனும் சர்வதேச கருத்தரங்கை புதுச்சேரி தேசிய தொழிற்நுட்பக் கழகம் நடத்துகிறது
காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழிற்நுட்பக் கழகம் புதுச்சேரியில் கட்டிட பொறியியல் துறை சார்பாக “பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு (Disaster Resilient Infrastructure)” என்ற தலைப்பில் ஐந்து நாள் சர்வதேச கருத்தரங்கமானது கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வ வு சிதம்பரம் பிள்ளை நிர்வாக வளாகத்தில் இணைய வழி மூலம் இன்று (22.05.2023) தொடங்கியது. இக்கருத்தரங்கை கழகத்தின் பதிவாளர் முனைவர் சீ. சுந்தரவரதன் அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார். கழகத்தின் இயக்குனர் (பொறுப்பு) முனைவர் கணேசன் கண்ணபிரான் அவர்கள் இணைய வழி மூலம் கலந்துகொண்டார்.
முன்னதாக இக்கருத்தரங்கிற்கு வந்திருந்த அனைவரையும் முனைவர் நிதி. எம் அவர்கள்வரவேற்று, பயிலரங்கு குறித்து விளக்கினார். இக்கருத்தரங்கில் பல்வேறு நிறுவனங்களின் ஆசிரிய உறுப்பினர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து பெறப்பட்ட 26 பதிவுகள் விளக்கப்படவுள்ளது. பேரிடர் தாங்கும் கட்டமைப்புகள் மற்றும் பேரிடர் தணிப்புத் துறையில் பணிபுரியும் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான ஆராய்ச்சிப் பகுதிகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், டெவலப்பர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் இக்கருத்தரங்கில் உரையாற்றவுள்ளார்கள்.
இக்கருத்தரங்கின் ஏற்பாடுகள் அனைத்தையும் முனைவர் நிதி. எம், உதவிப் பேராசிரியர் மற்றும் துறை தலைவர் (கட்டிட பொறியியல் துறை) மற்றும் முனைவர் கௌதம் ஏ, உதவிப் பேராசிரியர் (கட்டிட பொறியியல் துறை) இவர்கள் இருவரும் துறை உறுப்பினர்களின் உதவியோடு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

error: Content is protected !!
Open chat