ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த முக்கிய ஆளுமைகளுடன் பிரதமரின் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பல்வேறு முக்கிய ஆளுமைகளை சிட்னியில் (23.05.2023) தனியே சந்தித்தார்.
அந்த முக்கிய ஆளுமைகள் :
இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவரும், கேன்பராவில் உள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும் தலைவருமான பேராசிரியர் ப்ரையன் பி ஷ்மிட்.
வணிக நிபுணரும், மனித நேய விவகாரங்களில் ஆர்வமுடைய பேச்சாளருமான திரு மார்க் பல்லா
பழங்குடியினக் கலைஞர் திருமதி டேனியல் மேட் சுல்லிவன்
சர்வதேச உணவுக் கலைஞரும், உணவக நிறுவனரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவரும், பேச்சாளரும், தொழில்முனைவோருமான திருமதி சாரா டாட்
சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவுக் கழகத் தலைமை விஞ்ஞானி பேராசிரியர் டோபி வால்ஷ்
சமூகவியலாளரும், ஆராய்ச்சியாளரும், எழுத்தாளரும், இணை பேராசிரியருமான சால்வேட்டோர் பாபோன்ஸ்
ஆஸ்திரேலிய முன்னணிப் பாடகர் கய் தியோடர் செபாஸ்டியன்
பிரதமர் அவர்களுடைய சாதனைகளுக்காக வாழ்த்துத் தெரிவித்து இந்தியா – ஆஸ்திரேலியா நட்புறவை வலுப்படுத்துவதில் பங்களிக்குமாறு ஊக்கப்படுத்தினார்
More Stories
நெட்-ஜீரோ ஃபியூச்சர் ப்ரூஃப் பில்டிங் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்
அஸ்ஸாமின் முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார்
ஐநா அமைதிப் படையின் 75வது சர்வதேச தினத்தை கொண்டாடுகிறது