பிரதமரின் தேசிய பாலபுரஸ்கார் விருது 2023-க்கான விண்ணப்பங்களை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வரவேற்கிறது
சிறார்களின் தலைசிறந்த திறன்களை அங்கீகரிக்கும் விதமாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் கவுரவம் மிக்க பிரதமரின் தேசிய பாலபுரஸ்கார் விருதுகளை வழங்குகிறது. தீரச்செயல், விளையாட்டுக்கள், சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கலை மற்றும் கலாச்சாரம், புதிய கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் மிகச்சிறந்த சாதனை படைத்தவர்களை தேசிய அளவில் அங்கீகரிப்பதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் புதுதில்லியில் இதற்கென நடைபெறும் சிறப்பு விழாவில் மாண்புமிகு குடியரசுத்தலைவர் இந்த விருதுகளை வழங்குவார். ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு, பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டதாக இந்த விருது இருக்கும்.
இந்தியாவில் வசிக்கும் இந்தியக் குடிமகனாக இருக்கும் (விண்ணப்பங்கள் அல்லது பரிந்துரை பெறும் கடைசி தேதி நிலவரப்படி) 18 வயதுக்கு மிகாத சிறார் எவரும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காகவே வடிவமைக்கப்பட்ட https://awards.gov.in என்ற இணையப்பக்கத்தின் மூலமாக மட்டுமே இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். இணையதளம் வழியாக விண்ணப்பப்படிவங்களை பெறுவதற்கான கடைசி நாள் 31.07.2023.
விரிவான விதிமுறைகள் https://wcd.nic.in/sites/default/files/PMRBP%20Guidelines.pdf என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.
More Stories
ஜப்பானில் முதல்வர்
அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தை கோவாவில் நடைபெற உள்ளது
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டி -2022