இந்திய தர நிர்ணய அமைவனத்தின் “17953:2023 இன் படி ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கான UPVC ப்ரொபைல் “ பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி
இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னைக் கிளை அலுவலகம், “17953:2023 இன் படி ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கான UPVC ப்ரொபைல் “ என்ற தலைப்பில் சென்னையில் இன்று (25 May 2023) மானக் மந்தன் – கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. uPVC, அல்லது பிளாஸ்டிக் செய்யப்படாத பாலிவினைல் குளோரைடு, ஒரு நீடித்த மற்றும் இலகு ரக பொருளாகும், இது பொதுவாக கதவுகள் மற்றும் ஜன்னல்கள் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது. uPVC அதன் வலிமை மற்றும் ஆயுள் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. மேலும் uPVC இன் மற்றொரு நன்மை அவற்றின் ஆற்றல் திறன் ஆகும். இது பராமரிக்கவும் சுத்தமாக்கவும் எளிதானது. கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்கான uPVC க்காக புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தர நியமம் , uPVC ப்ரொபைலின் மூலப்பொருள் தேவைகள், தோற்றம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. இந்த தர நியமமானது , uPVC ன் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், பரிமாணங்கள், இயற்பியல் பண்புகள், இணக்க மதிப்பீட்டிற்கான மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இது uPVC இன் செயல்திறனை சோதிப்பதற்கான வழிகாட்டுதல்களைக் குறிப்பிடுகிறது, இதில் வெல்டிங் செய்யும் பண்பு, வெப்ப மாற்றத்தினால் பொருளின் நிறையில் ஏற்படும் வீழ்ச்சியை எதிர்க்கும் தாக்கம் ஆகியவை அடங்கும். கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்குப் பயன்படுத்தப்படும் uPVC இன் பாதுகாப்பு, தரம், நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை இது உறுதி செய்யும்.
BIS ஒவ்வொரு மாதமும் தொழில்துறையின் நலனுக்காக “மானக் மந்தன்” என்ற தலைப்பில் புதிய தொடர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்புகள், வர்த்தக சபைகள், தொழில் சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அத்தகைய தயாரிப்புகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், அரசுத் துறைகள், ஒழுங்குமுறை அமைப்புகள், ஆய்வகங்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தவும், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு முக்கியமான திருத்தங்கள் மற்றும் பரவலான புழக்க வரைவுகளைப் பகிரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ முத்திரை), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
. சத்தியமூர்த்தி கே.பி., தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), பொதுப்பணித் துறை, சென்னை நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். Smt.G.பவானி, இயக்குனர் மற்றும் தலைவர் (சென்னை கிளை அலுவலகம்) நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கினார். மற்றும் BIS இன் பிற அதிகாரிகள் கலந்துரையாடல் அமர்வுகளைச் சிறப்புற நடத்தினர். நன்றியுரையுடன் மானக் மந்தன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
More Stories
நெட்-ஜீரோ ஃபியூச்சர் ப்ரூஃப் பில்டிங் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்
அஸ்ஸாமின் முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார்
ஐநா அமைதிப் படையின் 75வது சர்வதேச தினத்தை கொண்டாடுகிறது