January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

#கி.வீரமணி_அறிக்கை

1 min read

பீகாரில் ‘பெரியார் - அம்பேத்கர்' வெடி வெடிக்கிறது! ‘‘நாம் கொடுக்கும் காசு வேண்டும் - ஆனால் நம்மோடு உட்கார்ந்து பார்ப்பனர்கள் சாப்பிட மறுப்பது ஏன்?'' பீகார் மாநில மேனாள் முதலமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி போர்க்குரல் வெறும் மிரட்டல்தான் பதிலா? மகாவெட்கக்கேடு! பீகார் மாநிலத்தின் மேனாள் முதலமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி இராமன் கடவுள் அல்ல என்றும், நாம் கொடுக்கும் காசை ஏற்கும் பார்ப்பனர் நம்மோடு அமர்ந்து சாப்பிட மறுப்பது ஏன் என்றும் எழுப்பிய குரல் பார்ப்பனர்களை ஒரு கலக்குக் கலக்கி விட்டது - ஆம், மாஞ்சிமூலம் பீகாரில் பெரியார், அம்பேத்கர் குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியில் இராமன் கோயில் வேகமாக கட்டப்படுகிறது. சாம, பேத, தான, தண்ட முயற்சிகளோடு, வரும் ஆண்டுத் தேர்தலுக்கு (உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில்) வாக்கு வங்கிக்காக பக்தியையே முதன்மைப்படுத்தி, அதன்மூலம் ஆட்சியை எப்பாடு பட்டேனும் பிடித்து விட வேண்டும் என்று பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு, இதுவரை நடத்தாத திட்டங்களை வழமைபோல் முன் வைத்து, அதிகாரப்பூர்வமில்லாத தேர்தல் பிரச்சாரம் அங்கே தொடங்கப்பட்டு விட்டது. அந்த மக்களின் அதிருப்தி மலை போல் இருப்பதை எப்படியாவது பனி போல் கரைந்தோடச் செய்துவிட வேண்டுமென்றே, திட்டமிட்டுக் காவிக் கட்சியினர் ஒன்றிய, மாநில ஆட்சி அதிகாரங்களைப் பயன்படுத்தி மும்முரமாக இறங்கி விட்டனர் மேனாள் பீகார் முதலமைச்சரின் போர்க்குரல்! சமூக சீரமைப்பு என்று சிறு ஜாதிகளை இணைத்த பழைய வித்தை (Social Engineering) இம்முறை பலன் தராது என்பதால், பெரிதும் இராமனை முன்னிறுத்தி, மதவெறியை விசிறிவிட காவிகள் வியூகம் வகுத்து நிற்கின்றனர்! பாபர் மசூதி இடிப்புக்குப் பின் - "இராமன் கோவிலோடு நாங்கள் நிற்க மாட்டோம்; காசி, மதுராவில் எங்களது அடுத்த குறி!" என்று பகிரங்கப் பிரகடனப்படுத்தி, நாட்டின் பொது அமைதி, சட்டம் - ஒழுங்கு நிலைமைக்குச் சவால் ஏற்படுத்தி, வரும் தேர்தலுக்குப் பயன்படுமாறு செய்யும் முயற்சிகள் திட்டமிடப்படுவது - பலரது பேச்சுகள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இந்நிலையில், பீகார் மாநிலம் உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்த பெரிய மாநிலம். அங்கே மேனாள் முதலமைச்சர், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து (S.C.) முதலமைச்சராக வந்த ஜித்தன் ராம் மாஞ்சி அவர்கள் 20.12.2021 அன்று இராமனைப் பற்றியும், பார்ப்பனப் புரோகிதர்கள் பற்றியும் பேசியுள்ளக் கருத்துகள் - அவர்களது வயிற்றில் 'புளியைக் கரைத்து விட்டிருக்கும்' போலிருக்கிறது. பார்ப்பனர்களைப் பற்றி அவதூறாகப் பேசி விட்டார் மாஞ்சி என்று கூறி, மாஞ்சியின் நாக்கை வெட்டுவோருக்கு ரூ.11 லட்சம் பரிசளிப்பதாக பீகார் மாநில பிஜேபி தலைவர் நரேந்திர ஜா அறிவித்துள்ளார் என்றால் மாஞ்சியின் உண்மையான குரல் பார்ப்பனர்களை எந்த அளவுக்குத் தேளாகக் கொட்டியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். அவருக்கு எதிராக பார்ப்பன சங்கத்தினர், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல் துறையில் புகார் அளித்து, பல ஊர்களில் அவர் மீது கண்டனத் தீர்மானத் தையும் நிறைவேற்றியுள்ளனர்! (ஆதாரம்:...

1 min read

கச்சத்தீவு மீட்பே ஒரே தீர்வு - தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கட்டும்! இலங்கைக் கடற்படையினரால் நேற்று (19.12.2021) மட்டும் தமிழ்நாட்டு மீனவர்கள் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; இதற்கு ஒரே தீர்வு கச்சத்தீவு மீட்பே! நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் குரல் கொடுக்கட்டும்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதி யாக கச்சத்தீவு கடற்பரப்பு உள்ளது. ஆனால், கச்சத்தீவு கடற்பரப்புக்குச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் சுட் டுக் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், கைது செய் யப்படுவதும் தொடர்கதையாகவே நடந்துகொண்டிருக் கிறது. 800-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக் கொலை இலங்கைக் கடற்படையால் இதுவரை 800-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் நள்ளிரவில் நடுக்கடலில் தமிழ்நாட்டு மீனவர்களை அரிவாளால் வெட்டுவது, கற்களைக் கொண்டு தாக்குவது இன்னமும் ஓய்ந்தபாடில்லை. இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதியன்று 5 தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்தது; இலங் கைக் கடற்படை. மேலும் 54 தமிழ்நாட்டு மீனவர்களையும் கைது செய்தனர். கரோனா தொற்று பரவல் காலம் என்பதால், அப் போது தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படை விடுவித்திருந்தது. அதன்பிறகு அக்டோபர் 15 ஆம் தேதி 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் கேட்பாரற்றுக் கிடந்து, முற்றிலும் சிதிலமடைந்து போயின....

வைர விழாவை கடந்து பகுத்தறிவு தேர் இழுக்கும் கி.வீரமணி திராவிடர் கழகத்தில் இருந்து கிளைத்த தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தாய்க் கழகத்தின் தலைவராக இருக்கும் கி.வீரமணி...

நீதிபதியின் தீர்ப்பு பொது ஒழுக்கச் சிதைவுக்குத் துணை போவதாக அமையலாமா?  - கி.வீரமணி  இந்தப் பொது ஒழுக்கத்துக்கு ஊறுவிளைவித்த சங்கராச்சாரியாருக்கு வக்காலத்து வாங்கி நீதிபதி தீர்ப்பு சொல்லலாமா?...

1 min read

பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு - தமிழ் படிக்காத வெளிமாநிலத்தவர்களுக்கு இடம் அளிக்கக் கூடாது அ.தி.மு.க. ஆட்சியின் ஆணை ரத்து செய்யப்படவேண்டும் நடக்க இருக்கும் தேர்வை ரத்து செய்து...

1 min read

திராவிட கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் பிறந்தநாள் விழா  திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் 89 வது பிறந்தநாள் விழா, பகுத்தறிவாளர் கழகம் சார்பில், திருவாரூரில் நடைபெற்றது....

கி.வீரமணி அவர்களின் பிறந்தநாளையொட்டி முதல்வர் நேரில் சென்று வாழ்த்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்...

error: Content is protected !!
Open chat